வெள்ளி, 5 ஏப்ரல், 2019

காட்டுப்பாக்கம் தாத்தா

ஒன்னாப்பு படிக்கற வயசுல மனசுல பதிஞ்ச பாட்டு,புடிச்சவங்க விரும்புங்க.இந்தக்குழந்தைப்பாடலை இயற்றியவர் “தம்பி ஸ்ரீநிவாசன்”
என்று இன்றுதான் அறிந்தேன்.நன்றிகள் கோடி.
காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்,
மாடி மேலே நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்,

ஆந்தை இரண்டு, கோழி மைனா,
அண்டங்காக்கை, குருவிகள்
பாந்தமாக தாடியுள்ளே பதுங்கிக் கொண்டிருந்தன.
உச்சி மேலே நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு! அச்சு! என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.
நன்றி-தம்பி சீனிவாசன்

2 கருத்துகள்:

  1. இன்று என் மகள் என் தாடி காடுபோல் வளர்ந்துள்ளது என்றதும் இந்த பாடல் நினைவுக்குவந்தது 1983ஆண்டு ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த பாடலை தமிழ் டீச்சர் அபிநயத்துடன் பாடிக்காட்டியது இன்றும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துள்ளது நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மனதிலும் இப்பாடல் இடம்பெற்றமை குறித்து மகிழ்வு ஏற்படுகின்றது நண்பரே....

      நீக்கு